அசாமில் மணமேடையில் குடிபோதையில் தள்ளாடி மணமகனை கண்டு ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்றும், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் பெரியோரிகள் கூறுவார்கள். அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனின் செயலால் திருமணமே நின்றுள்ளது. அப்படி என்னதான் அந்த திருமணத்தில் நடந்தது. வாருங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: ஜிம்மி கிம்மல் கேட்ட கேள்வி; சாதுரியமாக பதிலளித்த மலாலா!
அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் கதாநாயகன் பெயர் பிரசென்ஜித் ஹலோய். இந்து முறைப்படி நடந்த இத்திருமணத்தில் பல சடங்குகள் நடைபெற்றது. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மணமகன் பிரசென்ஜித் ஹலோய் மூக்கு முட்ட குடித்து விட்டு தள்ளாடிய படி குடிபோதையில் மணமேடையில் உட்கார்ந்திருந்ர். இதனால் அவரால் மணமேடையில் உட்கார்ந்து சடங்குகள் செய்யமுடியாமல் திணறினார்.இதனை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மணமகன் மதுபோதையில் திருமண நிகழ்வில் அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.