ஜிம்மி கிம்மலின் கேள்விக்கு மலாலா அளித்த சாதுரிய பதிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச திரையுலகத்தில் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் இந்த ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். அவர் மேடைக்கு வரும் போது கழுதையை கூட்டி கொண்டு வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்கவும்: மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
இதனிடையே நிகழ்ச்சி அரங்கில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலாவிடம் ஜிம்மி கிம்மல் ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வி என்னவென்றால், நீங்கள் சிறு வயதிலேயே நோபல் பரிசு வென்று வரலாற்றில் இடம் பிடித்துள்ளீர்கள். இது எனக்கு வியப்பாக உள்ளது. நீங்கள் கிரிஸ் பைன் மீது ஹேரி ஸ்டைல்ஸ் எச்சில் துப்பினார் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார்.
https://twitter.com/ABC/status/1635106354003337217
அதற்கு, நான் அமைதி பற்றி மட்டுமே பேசுவேன் என்று மலாலா பதிலளித்தார். மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடுவது எனது வேலை இல்லை என்று சூசகமாக பதிலளித்த மலாலாவின் இந்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர்.







