ஆஸ்கர் விருது வென்ற “எலிபென்ட் விஸ்பரர்ஸ்” – ஆனந்த் மஹிந்திரா பாராட்டு

ஆஸ்கர் விருதை வென்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்ற யானைகள் முகாம் ஆகும்.…

ஆஸ்கர் விருதை வென்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு குட்டி யானைகள் என 28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்திகி குன்செல்வெஸ் என்ற பெண்மணி, எலிபென்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என்ற ஆவண குறும்படத்தை எடுத்தார். இப்படத்தினை youtube மற்றும் Net Flix OTT தளத்தின் மூலம் வெளியிடப்பட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் படம் வெளிவந்த புதிதில் வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறையினர், பாகன்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆவண படம் ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெற்றது. முதற்கட்டமாக சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த ஆவணப்படம் உட்பட 10 பிரிவுகளுக்கான பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிடப்பட்டது.

இதில் முதுமலையில் தாயை பிரிந்த இரண்டு குட்டி யானைகளுக்கும் அதன் பராமரிப்பாளர்களுக்கும் இடையிலான பிணைப்பை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு தேர்வான நிலையில் இப்படம் சிறந்த ஆவண
குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் குட்டி யானைகளை பராமரித்து வந்த பழங்குடியினர்களான பொம்மன், பெள்ளி ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மட்டுமல்லாமல் வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற எலிபென்ட் விஸ்பரர்ஸ் திரைப்படத்தை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அந்தப் பதிவில், அற்புதமான இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்திய சினிமாவின் சுறுசுறுப்பான, இசை நிறைந்த கற்பனைகளை மட்டுமல்ல, இந்தியாவின் கரடுமுரடான, சமமான, அழகான யதார்த்தத்தை @The Academy அங்கீகரித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.