தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், 75வது சுதந்திர தின பாஜக லோகோவை வெளியிட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சுதந்திரத்துக்காக போராடிய 75 தலைவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு, 75 பாஜக நிர்வாகிகள் சென்று வீரவணக்கம் செலுத்த உள்ளதாக கூறினார்.
மேலும், மக்கள் ஆசி வேண்டி வரும் 16ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறும் யாத்திரை நடைபெறவுள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கோவையில் தொடங்கி, ஈரோடு நாமக்கல் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதியில் யாத்திரை நடைபெறும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியது எனக்கூறிய அவர், திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அதிகமானவை இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.








