முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 390 பேருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுவரை கொரோனாவால் 26 லட்சத்து 11 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 753 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 59 ஆயிரத்து 637 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 189 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 218 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். கோவையில் 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் 122 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு
ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உ.பி.: ரசாயனத் தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, 19 பேர் காயம்

Web Editor

பட்டாசு ஆலையில் விதிமீறல் கண்டறியப்பட்டால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Yuthi

டி20 போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

G SaravanaKumar