முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

பழங்குடி வாலிபரை லாரியில் கட்டி இழுத்துக் கொன்ற கும்பல்: ம.பியில் கொடூரம்

பழங்குடி வாலிபரை லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டம் பண்டா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர் கணையாலால் பீல் (Kanhaiyalal Bheel). இவர் கடந்த வியாழக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் வாகனத்தில் இருந்த பால் முழுவதும் கொட்டியது. ஆத்திரமடைந்த பால்காரர் சித்தர்மால் குர்ஜார் என்பவர், கணையாவை சரமாரியாகத் தாக்கினார்.

பின்னர் தனது நண்பர்களை போனில் அழைத்து வரச் சொன்னார். ஏழு பேர் வந்தனர். அவர்களும் அவரை சரமாரியாகத் தாக்கினர். வலி தாங்க முடியாமல் கதறிய அவர், தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். ஆனால், அவர்கள் கணையாவின் காலை கயிற்றால் கட்டி, அந்த கயிறை லாரியின் பின்னால் கட்டினர். சில மீட்டர் வரை தரதரவென இழுத்துச் சென்றது.

இதில் பலத்தக் காயமடைந்த அவர், கதறினார். பின்னர் மயங்கினார். ஆனால், கதறலைக் கண்டுக்கொள்ளாத அந்தக் கும்பல், கயிற்றை அவிழ்த்து, அவரை சாலையிலேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றது.

இதைக் கண்ட சிலர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கணையா பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வாலிபரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதை சிலர், வீடியோ வாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். மனித நேயமற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார், 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கோடநாடு வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ல் விசாரணை

Saravana Kumar

9 மாவட்டங்களில் இடியுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம்

Ezhilarasan

பட்ட மேற்படிப்புகள் இந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும்: வெங்கைய்யா நாயுடு

Niruban Chakkaaravarthi