முக்கியச் செய்திகள் தமிழகம்

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்: அண்ணாமலை

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்னை தீருமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் சுதந்திரமாக தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்க வழிவகை செய்யும் சட்டத்தை முதலமைச்சர் தடுக்க நினைப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக விவசாயி களிடம் கருத்து கேட்கப்பட்டதா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, சட்டமன்றத்தின் காலத்தையும் நேரத்தையும் வீணாக்கி, இப்படி ஒரு கண் துடைப்பு நாடகம் நடத்த வேண்டிய தன் காரணம் என்ன என சாடியுள்ளார்.

அரசியல் உள்நோக்கத்தோடு தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கை வளம்பெறும் திட்டங் களுக்கும், சட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கே நிற்பது வேதனை அளிப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.

Advertisement:
SHARE

Related posts

டிராக்டர் கலப்பையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

Jayapriya

பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

Gayathri Venkatesan

திமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சமத்துவபுரங்கள்: ஸ்டாலின் உறுதி!

Nandhakumar