‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் எச்.வினோத் ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். விஜய் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதால் ‘ஜனநாயகன்’ படம் தான் விஜய்யின் கடைசி படம் ஆகும். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவிட்டார். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது; இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது எனவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.