பொங்கல் பண்டிகை – பூக்களின் விலை உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் பனி பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி பூக்கள் விற்பனை சந்தையில் தற்போது பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மல்லிகை பூவின் விலை ரூ.6,000திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ1200-க்கும், முல்லை பூ ரூ.1000 க்கும், கனகாம்பரம் ரூ.1000 க்கும், செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.100-க்கும், ரோஜா பூ கிலோ ரூ.800-க்கும், அரளிப்பூ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகரிப்பதால் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.