முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு: 364 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 059 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 33,059 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 16 லட்சத்து 64 ஆயிரத்து 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது, 2 லட்சத்து 42 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 03 ஆயிரத்து 052 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 364 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 6016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 85 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 5509 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 2299 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 761 பேருக்கும் திருவள்ளூரில் 1890 பேருக்கும் திருச்சியில் 1271 பேருக்கும் கோவையில் 3071 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி!

Karthick

மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Karthick

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

Karthick