இந்தோனேசியா – பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பயணிகள் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகருக்கு நேற்று நள்ளிரவு 34 பயணிகளிடம் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது ஜாவா தீவின் செமரங் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 15 உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக ஜகார்த்தாவில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 22 பேர் அண்மையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த இரண்டு வாரத்திற்குள் தற்போது பேருந்து விபத்தில் மேலும் 15 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.