மொழிவழி மாநிலமாகத் தமிழகம் 1956 நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 1957 –ல் நடைபெற்ற மாநில தேர்தலில் துவங்கி இதுவரை தமிழகம் பத்து முதல்வர்களை முதல்வர்களைக் கண்டுள்ளது.
இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர் 1951 முதல் மார்ச் 1952 ஆம் ஆண்டு வரை, நாடு முழுவதும் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதனுடனே மாகாணப் பேரவைகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. அப்போதைய சென்னை மாகாணத்தில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடக மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
கல்வி தந்தை காமராஜர்
தமிழகம் 1956-ல் மொழிவழியில் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைபற்றி கு.காமராஜர் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் 1957 முதல் பிப்ரவரி 1962 வரை முழு ஐந்தாண்டுக் காலமும் அவர் முதல்வராக தொடர்ந்தார். 1962 –ல் நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மீண்டும் காமராஜர் அவர்களே முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சியை வலுப்படுத்தும் பனியில் ஈடுபடப்போவதாகக் கூறிய காமராஜர் அக்டோபர் 1963-ல் தனது முதல்வர் பதவியிலிறுந்த விலகினார். காமராஜரின் ஆலோசனைப்படி எம்.பக்தவச்சலம் தமிழகத்தின் முதல்வரானார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் போன்ற சமூக நலத்திட்டங்களுக்குச் செலவு செய்யலாம் என சட்டத்திருத்தத்தை பக்தவச்சலம்தான் கொண்டுவந்தார்.

‘தமிழ் நாடு’ என பெயர் வைத்த முதல்வர்
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகக் கடுமையாகப் போராடியது இக்காலத்தில்தான். அரசு அவர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறைகளும் அப்போது ஏற்பட்ட அரிசி பஞ்சமும் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்வதைக் கேள்விக்குறியாக்கியது. 1967 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. சி.என்.அண்ணாதுரை அவர்கள் முதல்வரானார். அண்ணா ஆட்சிப்பொறுப்பிற்கு வரும்வரை தமிழகம் சென்னை சட்டமன்றம் என்றே அழைக்கப்பட்டுவந்தது. சென்னை மாநிலம் என்பதைத் தமிழ் நாடு எனும் பெயர் மாற்றத்தை அண்ணா செய்தார்.
உடன்பிறப்புகளின் தலைவன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிப்ரவரி 1969 -ல் அவர் காலமானதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.கருணாநிதி தேர்வானார். 1971 –ல் நடைபெற்ற தேர்தலிலும் திமுக வெற்றிபெற்றது. மீண்டும் கருணாநிதி முதல்வரானார். ஆட்சிக்காலம் முடியும் தறுவாயில் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு அறிவித்த அவசரக் கால நிலையை எதிர்த்து நின்றதற்காக 1976 ஜனவரி மாத இறுதியில் திமுக அரசு கலைக்கப்பட்டது.

மக்கள் திலகர் எம்.ஜி.ஆர்
திமுக தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் திமுக -வை விட்டு விலகிய எம்.ஜி.ராமச்சந்திரன், 1972 ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் தனிக்கட்சியை துவங்கினார். அவருக்கு இருந்த திரைப் புகழ் மற்றும் மக்கள் செல்வாக்கின் விளைவாய் 1977 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர் முதல்வரானார்.
1980 –ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வரானார். 1985 மற்றும் 1988 என அடுத்து நடந்த தேர்தல்களிலும் அவரே வென்றார். உடல் நலக்குறைவின் காரணமாக 1988 –ல் அவர் காலமானதையடுத்து அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகப் பொறுப்பேற்றார். உட்கட்சி பிரச்சினை காரணமாக அந்த ஆட்சி கவிழ்ந்தது.

1989 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானார். ஆனால் மத்திய அரசின் தலையீட்டால் 1991 ஜனவரி இறுதியில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
‘அம்மா’ என்றழைக்கப்பட்ட முதல்வர்
இடைப்பட்ட காலத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு ஜெ.ஜெயலலிதா கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார். 1991 –ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். முழுமையாக ஐந்தாண்டுகள் ஆட்சி தொடர்ந்தது. 1996 –ல் நடைபெற்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைபற்றியது. கருணாநிதி மீண்டும் முதல்வரானர்.
முதல்வரான சாமானியர்
2001 –ல் மீண்டும் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். டான்சி வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. எனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ. பன்னீர்செல்வம் முதல் பதவி வகித்தார். அதன் பிறகு 2002 மார்ச் முதல் மார்ச் 2006 வரை ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்தார். 2011 திமுக ஆட்சியை பிடித்து மீண்டும் கருணாநிதி முதல்வரானார். 2011 ல் அதிமுக அட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். செப்டம்பர் 2014 ல் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் மே 2015 வரை முதல் பதவியிலிருந்தார். வழக்கிலிருந்து விடுபட்டு மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.

முதல்வரான விவசாயி
2016 ல் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர் காலத்திற்குப் பிறகு ஓரே கட்சி மீண்டும் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கும் வரலாறாக அது அமைந்தது. 2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா காலமானதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வரானார். அதிமுக வில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் 2017 பிப்ரவரி மாதம் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு முதல்வரானர்.
தமிழகம் மொழிவழி மாநிலமாக பிறிக்கப்பட்டு இதுவரை கு.காமராஜர், எம்.பக்தவச்சலம், அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒன்பது முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர்.
முதல்வரான தளபதி
இந்த வரலாற்று சிறப்புமிக்க வரிசையில் இன்று தமிழகத்தின் 10-வது முதல்வராக திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தன்னுடைய 14 வயதில் இளைஞர் திமுகவை உருவாக்கி பின்னர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவராக பொறுப்பேற்று தற்போது தன்னுடைய 68 வயதில் தமிழகத்தின் பத்தாவது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மு.க.ஸ்டாலின.







