செய்திகள்

25 வருடங்களுக்குப் பிறகு சென்னையை மொத்தமாக அள்ளிய திமுக!

சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும், 25 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றி சென்னையை தனது கோட்டையாக மாற்றியிருக்கிறது திமுக.

தமிழக சட்டசபை தோ்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் சென்னை மண்டலத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்தையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய 15 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும் வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வழக்கமாக, சென்னை மாவட்ட தொகுதிகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவது வழக்கம். ஆனால் 2001 , 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், முறையே எட்டு, மற்றும் ஆறு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சென்னையில், 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 10 இடங்களை சென்னையில் பிடித்தது. இதைத் தொடா்ந்து இப்போது (2021) சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

……..

Advertisement:

Related posts

சென்னை வந்தடைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Niruban Chakkaaravarthi

தேர்தல் விதிமுறையை பிரதமர் மீறியதாக மமதா பானர்ஜி குற்றச்சாட்டு!

Gayathri Venkatesan

ஈரோட்டில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

Gayathri Venkatesan