எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுக ஆலோசனை!

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை…

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதில் அக்கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்வது குறித்து சென்னையில் சில எம்எல்ஏக்கள் நட்சத்திர ஹோட்டலில் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் முகாமிட்டிருப்பவர்கள் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யலாம் என அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.