முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கிறது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முதலமைச்சராக அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..’ எனக்கூறி மு.க ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமை யான முறையில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம், தனபால் ஆகியோர் பங்கேற்றனர். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் முழங்காலிட்டு அமர்ந்து மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றார். பின்னர் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு அவர் சென்று மரியாதை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மாணவிகள்

Halley Karthik

செங்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த 108 ஆம்புலன்ஸ்

EZHILARASAN D

முன் ஜாமீன் கோரி ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

EZHILARASAN D