தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்பு

தமிழகத்தின் முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்குப் பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் சில…

தமிழகத்தின் முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்குப் பதவியேற்க உள்ளார்.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றியடைந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அறிவாலயத்தில் நடந்த திமுக எம். எல். ஏக்கள் கூட்டத்தில் திமுக சட்டமன்றக் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். நேற்றைய தினத்தில் 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் ஆளுநர் மாளிகையால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தபடி தொண்டர்கள் காண வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் எளிமையாகப் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தமிழகத்தின் 23-வது முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.