உங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று முதல்வராகப் பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றார். இவர் பதவியேற்பதைத்தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். தமிழக முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்னிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘ மக்களின் முதல்வராக’ பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திமுக ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுவாசிப்பதற்கு ‘உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழ அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழகத்தின் உரிமைகளை மீட்கத் தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கும்’.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.