“ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் மத்திய பாஜக அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எது அநாகரிகம்? எது அராஜகம்? எங்கள் வரியை வாங்கிக் கொண்டு எங்களையே பட்டினி போடும் மத்திய பாஜக அரசின் செயல்தான் அநாகரிகம், அராஜகம்!

நிதி தரமாட்டோம், அதிகாரத்தைப் பறிப்போம், இந்தியைத் திணிப்போம், எதிராகக் குரலெழுப்பினால் தொகுதி எண்ணிக்கையைக் குறைப்போம் எனும் உங்கள் பாசிச நடவடிக்கைகளுக்கு உயிரே போனாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்!

ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டி தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்”! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.