முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் 12 இடங்களை கோரும் தமாகா!

அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தமாகா அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

தங்களது கட்சியின் சைக்கிள் சின்னத்தை பெறுவதற்காக குறைந்தபட்சம் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஜி.கே.வாசன் கூறினார். எனவே, தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கும்படி அதிமுகவிடம் கேட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்கள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் மட்டும் தருவதாக கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து தான் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் கூறி வருவதையும் ஜி.கே.வாசன் சுட்டிக்காட்டினார். தாங்கள் கேட்ட தொகுதிகளை தருவதற்கு அதிமுக பரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் ஜி.கே.வாசன் கூறினார்.

Advertisement:

Related posts

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர்

Jeba

பீமா கொரேகான் வழக்கில் வரவர ராவிற்கு இடைக்கால ஜாமீன்!

Karthick

புதுச்சேரியில் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி: ஜி.ராமகிருஷ்ணன்

Niruban Chakkaaravarthi