முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!

கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார்.

வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில் வளர்ப்பதற்கான தீர்வைக் ஐந்து அடி செங்குத்து வடிவ கூண்டு கொண்டு, புதிய முறையைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த வளர்ப்புமுறை குறைந்த இடத்தில் அதிகபட்ச உற்பத்தியை கொண்டுள்ளது. மேலும், இதனை வளர்க்க பயன்படும் உரமாக, உலர்ந்த இலைகள், மாட்டின் சாணம், ஆட்டு சாணம், வேப்பஇலை மற்றும் பிற கரிம உரங்களையும் பயன்படுத்துகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “இந்த ஐந்து அடி செங்குத்து வடிவம் கொண்ட கூண்டில், கீழே உருளைக்கிழங்கையும், மேலே தக்காளி அல்லது மிளகாய் செடியை நட்டு வளர்த்தேன், மேலும், இவை தாவரங்களின் வளர்ச்சியையோ அல்லது உற்பத்தியையோ பாதிக்கவில்லை எனக் கூறினார்.

மேலும், செடி விதைகளை நட்ட பிறகு, வர்கீஸ் அவற்றை தவறாமல் தண்ணீர் உற்றி பாரமரித்து வருவதாகவும், ஒரு மாதத்திற்குள், அந்த கூண்டின் வெளியே இலைகள் வளர ஆரம்பித்தன, மேலும் அதனை நிரப்ப கரிம மற்றும் வேப்ப உரங்கள் போன்ற கரிம உரங்களைச் போட்டு அதனை பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த புதிய கூண்டு செடி வளர்ப்புமுறை, அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:

Related posts

மகளின் திருமண செலவுக்கு பணம் இல்லாததால், தற்கொலை செய்து கொண்ட தாய்!

Niruban Chakkaaravarthi

ஆன்லைன் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Niruban Chakkaaravarthi

ரஹானேவுக்கு பிறந்த நாள்: அவருடைய சாதனைகள் ஒரு பார்வை

Karthick