இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெறுவதாக இருந்த நிலையில், தற்போது சவுத்தாம்ப்டன் மைதானதிற்கு மாற்றப்பட்டதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடத்தப்படும் என்று ஐ.சி.சி அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து ஐ.சி.சி கூறுகையில் “2020 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் பெரும்பான்மையான போட்டிகள் நடந்தது. மேலும், இந்த மைதானம் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மற்றும் பயிற்சி வசதிகளை உள்ளடக்கியது. இது ஆன்-சைட் ஹோட்டல் டிரான்ஸ்மிஷனைச் சுற்றியுள்ள கொரோனா அபாயத்தை கணிசமாகக் குறைக்கும், மேலும், அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் சிறப்பாகப் பாதுகாக்கும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. கொரோனா நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு படிபடியாக தளர்த்துவது திட்டமிட்டபடி தொடர்ந்தால், குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்கள் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.