தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  பொங்கு…

தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக நடைபெறும் ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் மேற்கொண்டுள்ளார். இப்பயணம் சென்னையில் தொடங்கி மதுரையில் நிறைவுபெற உள்ளது. ’தமிழைத் தேடி’ பயணத்தின் ஒரு பகுதியாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிஞர்கள் உள்ளனர். அவர்கள் கலப்பு மொழியைத்தான் பேசுகின்றனர். தமிழ் மெல்லச் சாகவில்லை. வேகமாக செத்து வருகின்றது. லண்டனில் நுழைந்தால் பெயர் பலகை எவ்வாறு இருக்குமோ அப்படி தமிழகத்தில் உள்ளது. எந்த மொழியை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் தமிழில் மற்ற மொழியை கலக்காதீர்கள்.

இதையும் படியுங்கள் : ”பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும்” – பார்த்திபன்

தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், எனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி
தருவேன். கருப்பு மையை எடுத்துக்கொண்டு, தமிழ் மொழி தவிர வேறு மொழி எங்கு உள்ளதோ அதனை அழியுங்கள். தொலைபேசியை எடுத்தால் வணக்கம் என்று அழையுங்கள். ஹலோ என்று சொல்லாதீர்கள்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.