மிகப்பெரிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி உள்ளதாகவும், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும் என்றும், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் பானாம்பட்டு சாலையிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “மிகப்பெரிய எதிர்பார்ப்பினை மக்கள் மத்தியில் பொன்னியின் செல்வன் ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் படம் முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரவின் நிழல் படத்திற்கு 120 விருதுகள் கிடைத்துள்ளது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டபோது, அதில் தோற்றுவிடுவோம் என்று நான் எண்ணவில்லை. உதவி இயக்குனராக பாக்கியராஜிடம் பணிபுரிந்து, இயக்குனராகி, அதன் பின்னர் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.
இதையும் படியுங்கள் : பல தசாப்தங்களில் இல்லாத அளவு ஊதிய உயர்வை அறிவித்த டொயோட்டா, ஹோண்டா!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியது போன்று, ஆஸ்கார் வாங்கவேண்டும் என்பது தான் எனது கனவு. சினிமாவில் பயிற்சியினால் தான் வந்துள்ளேன். அது போன்று இளைஞர்களும், பயிற்சி மேற்கொண்டு, தங்களின் கனவை அடைய வேண்டும்.
மிக உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தன்னடக்கத்தோடு இருப்பது முக்கியம். குழந்தைகளுக்கு அட்வைஸ் பன்னால் பிடிக்காது. அதனால் நான் அட்வைஸ் பன்ன விரும்பவில்லை. அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கவிட வேண்டும்.
என்னுடைய தந்தை தான் எனக்கு ரோல் மாடலாக இருந்தார். பூஜை அறையில் எனது தகப்பனார் போட்டோவை தான் சாமியாக வைத்து வழிபட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.