திருப்பூரில் வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!

திருப்பூரில் வீடு புகுந்த திருட முயன்ற வடமாநில இளைஞரை பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவர் வீட்டின் அருகே மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை பரமசிவன் மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

தொடர்ந்து பரமசிவன் உள்ளே சென்று பார்த்த பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டில் திருட முயற்சித்தது தெரிய வந்தது. பரமசிவம் பிடிக்க முயற்சித்த போது திருடன் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் பரமசிவன் சத்தமிடவே அங்கு வந்த பொதுமக்கள் தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில இளைஞர் என தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அந்த இளைஞரை பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் வீடு புகுந்த திருட முயன்ற வடமாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.