திருநெல்வேலியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள பழமையான கடைசி மருத மரத்தை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நெல்லை டவுன் ஆர்ச் முதல் திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் வரை உள்ள நெல்லையப்பர் நெடுஞ்சாலை நீண்ட காலமாக பழுதாகி உள்ளது. மழை நேரங்களில் சாலையில் நீர் அதிகளவில் தேங்கியும் கூட்டு குடிநீர் திட்டப் பணிக்காக சாலையின் தோண்டப்பட்ட குழிகளால் இந்த சாலை முழுவதும் பாதிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்பெல்லாம், சுவாமி நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் மருத மரங்கள் நிறைந்து காணப்படும். ஒவ்வொரு சித்திரை திருவிழா கொண்டாட்டத்தின் போதும் சுவாமி தீர்த்தவாரி செல்லும் போது ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
அப்போது நெல்லையப்பர் சாலையின் இருபுறமும் இருக்கும் ஏராளமான மருத மரங்களின் நிழலிலே பல கிலோமீட்டர் குளிர்ச்சியுடன் நடந்து செல்வார்கள். பக்தர்களுக்கு இயற்கையோடு , நிழலும் தரக்கூடிய வகையில் இந்த மருத மரங்கள் காட்சி தந்தன.
இதனையும் படியுங்கள்: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு!
தற்போது, நெல்லையப்பர் சாலையில் ஒரே ஒரு மருத மரம் மட்டுமே எஞ்சியுள்ளது. இது பழமையான மருத மரமாகும். பழமையை நினைபடுத்தும் வகையில் எஞ்சியுள்ள கடைசி மருத மரத்தினை சாலை மற்றும் மின் விநியோகம் பராமரிப்பிலிருந்து பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட வேண்டும் என்றும், மருத மரத்தினை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
– யாழன்