சிறு தானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு; 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளை சமைத்து நோபில் உலக சாதனை

ராஜபாளையத்தில் சிறு தானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100 பேர் சேர்ந்து 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளைச் சமைத்து நோபில் உலக சாதனை படைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்…

ராஜபாளையத்தில் சிறு தானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 100 பேர் சேர்ந்து 5 நிமிடத்தில் 100 விதமான உணவுகளைச் சமைத்து நோபில் உலக சாதனை படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வியாபார சங்க கட்டடத்தில் ஊட்டச்சத்து நிபுணர்
சரண்யா ஏற்பாட்டின் பேரில் சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நோபில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த 100
பேர் கலந்து கொண்டனர்.

சிறு தானியங்கள் மூலம் நெருப்பு மூட்டாமல் 5 நிமிடங்களில் 100 விதமான உணவுகள்
தயாரிக்கும் உலக சாதனை நிகழ்ச்சியை நோபில் உலக சாதனை அமைப்பின் முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.


கலந்து கொண்டவர்கள் 5.13 நிமிடங்களில் சிறுதானியங்கள் காய்கறிகளை கொண்டு 100
விதமான உணவுகளை தயார் செய்தனர்.

தயாரித்த அனைத்து உணவுகளின் தரத்தை பரிசோதித்த நோபில் ரெக்கார்ட் அமைப்பினர் சாதனையை ஏற்றுக் கொண்டு, சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.