கந்துவட்டி கொடுமையால் உயிரிழப்பு: வீடியோவால் பரபரப்பு!

மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது…

மதுரையைச் சேர்ந்த முஹம்மது அலி என்பவர் கந்துவட்டி கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டார்.உயிரிழப்புக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மகபூப்பாளையம் அன்சாரிநகர் 7வது தெரு பகுதியை சேர்ந்த முஹம்மது அலி (37). இவர் செல்வக்குமார் என்பவரின் கந்துவட்டி தொல்லை காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறி காவல்துறையினருக்கு வேண்டுகோள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியிட்டுக்கு பிறகு அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டார். இவருக்கு திருமணமாகி 8 வயது மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். முஹம்மது அலி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கந்துவட்டி காரணமாக உயிரிழப்பு செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துவரும் நிலையில் தன்னுடைய உயிரிழப்புக்கு கந்துவட்டிதான் காரணம் என முஹம்மது அலி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு மனதை கலங்கவைக்கும் விதமாக உள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர் பேசிய வீடியோவில் கூறியிருப்பதாவது, “வழக்கறிஞர் செல்வகுமார் என்பவரிடம் 5 லட்சம் கடன் வாங்கிய நிலையில் 6 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தியும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை செய்து வருகின்றனர். என்னால் இதை சுத்தமாக சமாளிக்க முடியவில்லை, வீட்டிற்கு வந்து மனைவி குழந்தைகளை அவதூறாக பேசுகிறார்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர்.

என்னுடைய இந்த சாவிற்கு வழக்கறிஞர் செல்வக்குமார், ஜெயேந்திர சிங் ,காமாட்சி,மற்றும் மாரிமுத்து ஆகியோர்தான் முக்கிய காரணம். பிள்ளைகளை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று தந்தையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னோடு முடியட்டும் இந்த கொடுமை வேறு யாரும் இது போன்ற கந்துவட்டி கொடுமையால்உயிரை மாய்த்துக்
நிலை வரக்கூடாது, மாநகர காவல்துறை ஆணையர் அவர்களே நடவடிக்கை எடுங்கள் என்றும் கண்ணீருடன் பதிவிட்டிருந்தார்.

மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களே என்னுடைய குடும்பத்தின் குறைகளையும் தீர்த்து வையுங்கள், என்னுடைய மனைவி குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் முதல்வரே, என கண்ணீர் மல்க எட்டு நிமிட வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டுஉயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வீடியோவில் காண கீழே கிளிக் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.