ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகல்?

காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும், அதன் பின்னர், ஆஸ்திரேயா தொடரிலும் சிறப்பாக பந்துவீசி…

காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

துபாயில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும், அதன் பின்னர், ஆஸ்திரேயா தொடரிலும் சிறப்பாக பந்துவீசி தமிழக வீரர் நடராஜன் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இதையடுத்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் நடராஜனின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அவரின் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது வருத்தம் அளிப்பதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.