கொரோனா இரண்டாவது அலை காரணமாக உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தி 2021-ம் ஆண்டுக்கான ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 25% குறைந்துள்ளது என ஐசிஆர்ஏ வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐசிஆர்ஏ (ICRA) வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா இரண்டாவது அலை காரணமாக உள்நாட்டு சிமெண்ட் உற்பத்தி இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 25% குறைந்துள்ளது.
இதன்காரணமாக வரும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாத நடுப்பகுதியில் சிமெண்ட் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிக்கவேண்டிய அழுத்தம் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா அலை தாக்கியபோது ஏப்ரல் மாதம் சிமெண்ட் உற்பத்தி 35% குறைந்திருந்தது.
சிமெண்ட் உற்பத்தி குறைந்த காலத்தில் உள்ளீட்டுச் செலவு மற்றும் மின்சார தேவைகளைச் சரிசெய்ய சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் சிமெண்ட் விலையை 5% உயத்தியது. இந்த விலை உயர்வும் கொரோனாவின் ஊரடங்கின் தாக்கமும் தற்போதைய சிமெண்ட் உற்பத்தி குறைவுக்கு காரணம்” என கூறப்பட்டுள்ளது.







