டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மற்றும் மாணவர் ஒருவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில், டெல்லியில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர கலவரம் ஏற்பட்டது. அதில், 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு மே மாதம், பெண்கள் அமைப்பைச் சேர்ந்த தேவகானா கலிதா, நட்டாஷா மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஆசிப் இக்பால் ஆகியோர் உபா சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு ஓராண்டுக் காலமான இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அவர்கள் மூவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.







