சேலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதே நேரம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுப்பிரமணியின் மகன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அவர் கடந்த 7-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகன் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த சுப்பிரமணி நேற்று இரவு மருத்துவமனையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







