தாய்வான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிவன்’ சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டு மணிக்கு ரூ.29-ஆயிரம் கோடி இழப்பை உலகளவில் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைத்து வெளியீடும் மீம்ஸ்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
மத்திய தரைக்கடற்பரப்பையும் செங்கடலையும் இணைக்கக்கூடிய சூயஸ் கால்வாய் வழியாக நாளொன்றுக்கு 50 கப்பல்கள் வரை பயணிக்கின்றன. இந்த கால்வாய் இல்லையென்றால் ஆப்பிரிக்காவைச் சுற்றித்தான் சரக்குக் கப்பல்கள் பயணிக்க வேண்டியிருக்கும். இதற்கு வெகுநேரமாகும் என்பதாலேயே இந்த கால்வாய் வர்த்தக உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிக்கிக் கொண்ட கப்பலை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல சரக்கு கப்பல்கள் செல்ல வழியில்லாமல் எவர் கிவன் கப்பலைப் பின் தொடர்ந்து அதே இடத்தில் தேங்கி நிற்கும் செயற்கைக்கோள் புகைப் படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பல சீரியஸான சம்பவங்களையும் தங்கள் நகைச்சுவை உணர்வைத் தெளித்து ருசிகர மீம்ஸை உருவாக்குவதில் நம் நெட்டிசன்களுக்கு இணை நெட்டிசன்களே. இதன் ஒரு பகுதியாகவே வர்த்தக உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இச்சம்பவத்தையும் நெட்டிசன்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்.

இதை வைத்து மீம்ஸ் மற்றும் டிக் டாக் பதிவேற்றி தங்கள் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி வருகிறார்கள். பல டிக் டாக் பயனாளர்கள் தங்கள் வீடியோகள் மூலம் இதன் முக்கியத்துவத்தை மக்களுக்குப் புரியவைப்பதற்கும் முயன்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

