விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – போக்சோவில் முதியவர் கைது!

திருச்சியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது தோழிகளுடன் விளையாடி கொண்டு இருந்த போது, அங்கு வந்த பரணிகுமார் (54) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகமான 1098விற்கு செல்போனில் தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளார். அந்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை செய்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை புகார் கொடுக்க வைத்துள்ளனர்.

இதையடுத்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பரணிகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.