புகைத்தடை சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பள்ளிகளுக்கு அருகே புகைப்பது அதிகரித்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற புகைத் தடைச் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்…

பள்ளிகளுக்கு அருகே புகைப்பது அதிகரித்திருப்பதால் பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற புகைத் தடைச் சட்டத்தை கடுமையாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் பள்ளிகளைச் சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறர் புகைத்து விடும் புகையை சுவாசிப்பதால் பள்ளிக் குழந்தைகளுக்கு நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்கள் ஏற்படுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் என்று கூறியுள்ள அவர், அந்த சட்டத்தை கடுமையாக செயல்படுத்தி பள்ளிக் குழந்தைகளைக் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.