“அதிமுக மக்களவை குழு தலைவர் ” என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகனுக்கு பாஜக சார்பில் கடிதம்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுகவின் மக்களவை குழு தலைவர் என குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற…

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுகவின் மக்களவை குழு தலைவர் என குறிப்பிட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு நாளை தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், அதன் பின்னர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் நடைபெற உள்ள நிலையில் மத்திய பஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை இன்று நடைபெறுகிறது.

இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுளள்து. இன்னும் சற்று நேரத்தில்( 3.30pm ) பிரதமர் மோடி தலைமையில் தொடங்க உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு வழங்கப்பட்டுளள்து.

ஏற்கனவே இபிஎஸ்-ஓபிஎஸ் ஆகிய இருவரில், மத்தியில் இருப்பவர்கள் யாருக்கு ஆதரவு என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் இதுபோன்ற அழைப்பு வந்திருப்பது, இரண்டு ஆதரவாளர்களிடையேயும் பெரும் சலலப்பை ஏற்படுத்தியுளள்து.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.