இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி…

இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை திருட முயற்சி செய்தனர். ஒரு கார் சீனிவாசன் என்பவருடையது. மேலும் இரு சக்கர வாகனத்தை திருடிய பொழுது பொதுமக்கள் சுற்றிவளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து திருடியவர்களை காவல் நிலையத்தில் ஒபப்படைத்தனர்.

இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் பால்ஸ் தோட்டா துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சிசிடிவி பதிவாகியிருந்தது.

—–அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.