சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்!

உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் 23 நொடிகள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் 6500…

உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் 23 நொடிகள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.

உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் 6500 சிலம்பாட்ட வீரர்கள் இணைந்து தொடர்ச்சியாக  சிலம்பம் சுற்றி உலகசாதனை முயற்சி செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரதி சிலம்பம் பயிற்சி பள்ளி மூலமாக 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து 20 நிமிடங்கள் 23 நொடிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த சாதனையானது யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் மூலமாக கண்காணிக்கப்பட்டு அங்கரிக்கப்பட்டது. பின்னர் சாதனையில் ஈிடுபட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்கள்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.