இரவில் ஒளிதராத உயர்மின் கோபுர விளக்கு – பொதுமக்கள் அவதி!

போச்சம்பள்ளியை அடுத்த மாத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர்,  நாளுக்கு…

போச்சம்பள்ளியை அடுத்த மாத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர்,  நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நகரமாகும். இது கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையையும், தர்மபுரி-திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையையும் மையமாகக் கொண்ட பகுதி என்பதால் குடியிருப்புகள், அரசுத்துறை அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், மற்றும் வர்த்தக கடைகள் என அனைத்தும் இப்பகுதியில் உள்ள நிலையில்,  மத்தூர் நான்கு வழி சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற சாலையை அகலப்படுத்தி, இரவு நேரத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் மைய பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், நான்கு புறத்தில் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் நன்கு தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு ஆறு மாத காலமாக இந்த உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் மத்தூர் இருளில் முழ்கியதால் ஓட்டுநர்கள், சுற்றுவட்டாரப்  பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரவு நேரங்களில் செல்ல பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு  சீரமைப்பு தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

—-ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.