நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு?

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் கிட்டதட்ட 34,000 மேல் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை…

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நியாய விலை கடைகள் கிட்டதட்ட 34,000 மேல் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை கடைகளில் தமிழ்நாடு அரசு பொதுவினியோக திட்டத்தின்கீழ் விலையில்லா அரிசி மற்றும் கோதுமை,  சர்க்கரை,  துவரம் பருப்பு,  பாமாயில் மற்றும் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  வெளிச்சந்தையை விட மிகக்குறைந்த விலையில் பருப்பு மற்றும் பாமாயில் விற்பனை செய்யப்படுவதால்,  நடுத்தர மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். பொதுவாகவே ஒரு மாததின் முதல் வாரத்திலேயே நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விடும்.

ஆனால் இம்மாதம் தொடங்கி 2 வாரம் கடந்தும்,  மாதந்தோறும் வழங்கப்படும் பருப்பு வகைகளும் மற்றும் பாமாயிலுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் வழங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : 30 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகளுக்கு மாப்பிள்ளை தேடும் குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

இதையடுத்து,  நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பருப்பு பாமாயில் உள்ளிட்டவற்றை நம்பி இருக்கும் குடும்பங்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.  மேலும்,  தட்டுப்பாட்டை போக்கி உடனடியாக பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.