ஆப்பிள் நிறுவனமனாது 2026-ல் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிலையில் இந்த ஐபோன்களின் வடிவமைப்பு, வண்ணம், கேமரா உள்ளிட்டவை பற்றிய முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.
வடிவமைப்பு (DESIGHN)
சமீபத்திய ஆப்பிள் ஐபோன்களின் டிஸ்ப்ளேவின் வடிவமைப்பானது மாத்திரை வடிவ கட்அவுட் மற்றும் டைனமிக் ஐலேண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளது, ஆனால் ஐபோன் 18 ப்ரோ தொடரிலிருந்து அந்த அணுகுமுறை மாறலாம் என்று கூறப்படுகிறது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் Face ID hardware-ஐ டிஸ்ப்ளே பேனலுக்குக் கீழே மாற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. தற்போதைய மாடல்களில் காணப்படும் பெரிய வெட்டுப்பகுதி கணிசமாகச் சுருங்கி, முன்பக்க கேமராவிற்கு ஒரு சிறிய துளையை மட்டுமே இருக்கும். இது தொடர்பாக கசிந்த சில புகைப்படங்களின் படி selfie camera மையத்தில் இருக்காது என்றும் அதற்குப் பதிலாக, அது டிஸ்ப்ளேயின் மேல் இடது பக்கத்திற்கு அருகில் இருக்கும் என்றும் தெரிகிறது.
வண்ணம் (COLORS)
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில், பின்புற வடிவமைப்பு வழக்கம்போலவே இருக்கும். மேலும் ஆப்பிள் நிறுவனம் தங்களது ப்ரோ வரிசைக்காக, deep purple, burgundy, and brown ஆகிய அடர் வண்ணங்கள் உள்ளிட்ட சில புதிய வண்ணங்களைச் சோதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கேமரா (CAMERA)
ஐபோன் 18 ப்ரோ வரிசையில், ஆப்பிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்தும் துறைகளில் camera hardware-ம் ஒன்று. பிரதான கேமராவில் variable aperture mechanism இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. தற்போதுள்ள ஐபோன்களில் காணப்படும் fixed aperture அமைப்பைப் போலல்லாமல், இந்த variable aperture mechanism அமைப்பானது, சென்சாருக்குள் நுழையும் ஒளியின் அளவை Camera Lens சரிசெய்துகொள்ள அனுமதிக்கும்.
இந்த அணுகுமுறை, மிகவும் இயல்பான depth-of-field effects-யை வழங்கவும், low-light சூழ்நிலைகளில் படத் தரத்தை மேம்படுத்தவும் உதவக்கூடும். இந்த அம்சம் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸில் மட்டும் இருக்கலாம் என்றும் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
புதிய சிப் (New Chip)
ஆப்பிள் நிறுவனமானது இந்த ஐபோன்களில் , A20 Pro என்றழைக்கப்படும் ஒரு புதிய processor-யை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப், TSMC-யின் வரவிருக்கும் 2nm செயல்முறையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
CPU, GPU மற்றும் Neural Engine ஆகியவை அமைந்துள்ள அதே wafer மீதே RAM-ஐ நேரடியாகப் பொருத்தும் புதிய பேக்கேஜிங் முறையை ஆப்பிள் கையாளக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூடுதல் நெருக்கமான ஒருங்கிணைப்பு, கூறுகளுக்கு இடையே விரைவான தகவல் பரிமாற்றத்தை சாத்தியமாக்குவதுடன், மின் திறன் மற்றும் வெப்ப மேலாண்மையையும் மேம்படுத்தக்கூடும்.
முந்தைய தலைமுறைச் சிப்புடன் ஒப்பிடுகையில், இந்தச் CHIP செயல்திறனில் சுமார் 15 சதவீதமும், power efficiency-யில் 30 சதவீதம் வரையிலும் மேம்பாட்டை வழங்கக்கூடும் என கூறப்படுகிறது . இந்த மேம்பாடுகள், மிகவும் மேம்பட்ட ‘Apple Intelligence’ அம்சங்களைச் செயல்படுத்தவும் உதவக்கூடும்.
பேட்டரி (BATTERY)
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸானது சுமார் 5,100mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெறக்கூடும். இதனால் இந்தப் பெரிய பேட்டரியைப் பொருத்துவதற்காக, இந்த ஃபோன் சற்றே தடிமனாகவும் கனமாகவும் இருக்கும். மேலும் இந்த பேட்டரியின் எடை 240 கிராமைத் தாண்டவும் வாய்ப்புள்ளது.
அறிமுகமாகும் காலம் (TIME OF INTRODUCTION)
ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன்களை அறிவிக்கும், மேலும் ஐபோன் 18 ப்ரோவும் அதே கால அட்டவணையைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விலை (INDIAN PRICE)
இந்தியாவுக்கான விலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய ஐபோன் 17 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ. 1,34,900 ஆகவும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் ஆரம்ப விலை ரூ. 1,49,900 ஆகவும் உள்ளது. ஐபோன் 17 ப்ரோ சீரிஸின் விலைகள் சில ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டதால், ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய விலை உயர்வை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, அடுத்த தலைமுறை மாடல்களின் விலையையும் இதே போன்ற வரம்பிற்குள் வைத்திருக்க விரும்பலாம். இருப்பினும், இறுதி விலையானது உதிரிபாகங்களின் விலை, மெமரி விலைகள் மற்றும் பெரிய அளவிலான விநியோகச் சங்கிலி நிலைமைகள் போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.
வெளியீட்டு நிகழ்வு நெருங்கும் வரை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிட வாய்ப்பில்லை, எனவே தற்போதைய தகவல்கள் கசிவுகளின் அடிப்படையிலான ஆரம்பகால எதிர்பார்ப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.







