“தனி மனித உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” – ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!

மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார்.  கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம்…

மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் வேதனை தெரிவித்துள்ளார். 

கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை, அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

2023-ம் ஆண்டில் தனது திருமண நாளில் தனது கணவருக்கு திருமணநாள் வாழ்த்தை வெளியிட்ட சைந்தவி, இந்த ஆண்டு அத்தகைய எந்த பதிவையும் வெளியிடவில்லை. இதனிடையே ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரியபோவதாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் நேற்று (மே 14) சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷை விட்டு பிரியவுள்ளதாக அறிவித்தார். அதேபோல், ஜி.வி பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளபக்கத்தில் அதிகாரபூர்வமாக இதனை அறிவித்தார்.

ஆனால், ஜி.வி.பிரகாஷின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் இன்று (மே 15) புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

“யாரோ ஒரு தனிநபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

https://twitter.com/gvprakash/status/1790631627359723984

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.