சர்ச்சை கருத்து விவகாரம்: தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தை திசை திருப்பும் நாடகம் – ஆதவ் அர்ஜுனா பேச்சு

நடிகர் ரஜினிகாந்து குறித்த தனது கருத்தானது தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவிக்கு நடந்த கொடூரத்தை திசை திருப்ப பயன்படுத்துப்படுவதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தவெக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய க்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ”எம்.ஜி.ஆர்-க்கு பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வரவேண்டுமென ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், திமுக அவருக்கு பல மிரட்டல்களைக் கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் செய்தது” என்று பேசினார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் மற்றும் திரைத்துறையினர் ஆதவ அர்ஜுனாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இது தொடர்பாக நடிகர் வெளியிட்ட அறிக்கையில்,ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் கூறிய கருத்துகள் உண்மைக்கு மாறானவை என்றும் காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில், வீனஸ் காந்தி சிலை அருகே நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தலைவர் ரஜினிகாந்த் மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. அன்பு மட்டும்தான் இருக்கிறது. இதை நான் உறுதியாக சொல்கிறேன். தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவிக்கு நடந்த கொடூரத்தை திசை திருப்பவே கடந்த 5 நாட்களாக இந்த நாடகம் ஓடிக்கொண்டிருக்கிறது” என்றார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.