டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 1.03 கோடி வசூலித்த முதல் பெண் டிக்கெட் பரிசோதகரின் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது
ரயிலில் பயணம் செய்யும் பலர் டிக்கெட் இன்றி பயணம் செய்வதும், சாதரண டிக்கெட் எடுத்துக் கொண்டு முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்வது மற்றும் நடைமேடை சீட்டு இல்லாமல் ரயில் நிலையத்திற்கு வருவது போன்ற காரணங்களால் டிக்கெட் பரிசோதகர்களால் அபாரதம் விதிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய ரயில்வே சில தினங்களுக்கு முன்பு தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் முறையான டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகளிடமிருந்து 1 கோடிக்கும் அதிகமான அபராதம் வசூலித்த முதல் பெண் ரயில்வே ஊழியரின் படங்களை வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
இதனையும் படியுங்கள்: இன்று மாலை களமிறங்கும் பத்து தல படத்தின் ’ராவடி’ பாடல்….
தெற்கு ரயில்வேயில் முதன்மை டிக்கெட் பரிசோதகராக சென்னை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றுபவர் ரோசலின் ஆரோக்கிய மேரி. இவர் டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் இருந்து கிட்டத்தட்ட 1.03 கோடி அபராதம் வசூலித்துள்ளார். இது குறித்து இந்திய ரயில்வே தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்
” தனது கடமையில் அர்ப்பணிப்போடு செயல்பட்ட தெற்கு ரயில்வேயின் தலைமை டிக்கெட் பரிசோதகரான ரோசலின் ஆரோக்கிய மேரி டிக்கெட் பரிசோதிக்கும் ஊழியர்களிலேயே அதிகமான அபராதம் வசூலித்த முதல் பெண் ஊழியர் ஆவார். முறையாக டிக்கெட் எடுக்காத பயணிகளிடமிருந்து அவர் ₹ 1.03 கோடி அபாரத் தொகை வசூலித்துள்ளார்” என பதிவிட்டுள்ளது.
இதேபோல சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் எஸ் நந்த குமார், முறையான டிக்கெட் மற்றும் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த பயணைகள் குறித்த 27,787 வழக்குகளில் கிட்டத்தட்ட ரூ.1.55 கோடி அபராதம் வசூலித்துள்ளார். இந்த தொகை டிக்கெட் பரிசோதிக்கும் ஊழியர்களால் இதுவரை பெறப்பட்ட அதிகபட்ச வருவாயாகும்.
Showing resolute commitment to her duties, Smt.Rosaline Arokia Mary, CTI (Chief Ticket Inspector) of @GMSRailway, becomes the first woman on the ticket-checking staff of Indian Railways to collect fines of Rs. 1.03 crore from irregular/non-ticketed travellers. pic.twitter.com/VxGJcjL9t5
— Ministry of Railways (@RailMinIndia) March 22, 2023