சிம்புவின் ’பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ’ராவடி’ பாடலின் வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஓபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து, வரும் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….
கடந்த 18 ஆம் தேதி ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
https://twitter.com/StudioGreen2/status/1639484778679521280?t=xr43CJPI05QiytCigfGBzA&s=08
இந்நிலையில், இன்று இப்படத்தின் ’ராவடி’ என்ற பாடலின் வீடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகை சாயிஷாவின் கலக்கலான நடனத்தில் உருவாகியிருக்கும் ’ராவடி’ பாடல், மாலை 5:04 மணிக்கு வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ’நம்ம சத்தம்’, ’நினைவிருக்கா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படத்தின் மற்றொரு பாடல் வெளியாகும் என அறிவிக்கப்படிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.








