பேருந்தில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்திய பின்பு, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான கூடுதல் ஆக்சிஜனை விரைந்து வழங்குவோம். தினமும் 20 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தேவை என ஐஎம்ஏ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஒரு பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மூன்று படுக்கை கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில், 8 இருக்கைகள் இருக்கும். அங்கு மருத்துவர், செவிலியர் போன்றவர்கள் இருப்பார்கள்.
இன்னும் ஒரு வாரத்தில் இரும்பாலையில் ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கை பயன்பாட்டுக்கு வருகிறது. தொடர்ந்து பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனக் கூறினார்.







