’என்னை கைது செய்யுங்கள்..’ மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசம்!

நாரதா ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ அலுவலகம் முன்பு முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். நாரதா என்ற இணையதள செய்தியாளர் ஒருவர், தொழிலதிபர் என்று கூறி,…

நாரதா ஊழல் வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ அலுவலகம் முன்பு முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார்.

நாரதா என்ற இணையதள செய்தியாளர் ஒருவர், தொழிலதிபர் என்று கூறி, கொல்கத்தாவில் முதலீடு செய்ய உதவுமாறு அப்போதைய திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்து, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வழக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அமைப்பு, ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோரை இன்று கைது செய்தது.

இதையறிந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேராக சிபிஐ அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சபாநாயகர் மற்றும் மாநில அரசின் அனுமதியின்றி அமைச்சர்களை எப்படி கைது செய்யலாம் என்றும் ஆளுநர் எந்த அடிப்படையில் அவர்களுக்கு அனுமதியளித்தார் என்றும் அப்படியென்றால் தன்னையும் கைது செய்யுங்கள் என்றும் மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கூறினார்.

கட்சித் தொண்டர்கள் பலரும் அங்கு கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. சி.பி.ஐ அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.மேற்கு வங்க ஆளுநர். ஜகதீப் தங்கர், சட்டம் ஒழுங்கை சீரமைக்க கோரி மாநில அரசைக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அங்கு பதற்றம் சூழல் நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.