மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீர் ராஜினாமா – காரணம் என்ன…?

மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு நாளை மதியம் வரை அவகாசம் கோரியுள்ளது.

இந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காகவே ரவ்னீத் சிங் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் (AAP) நடைபெற்று வரும் பஞ்சாப் மாநிலத்தில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான திட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளார்.

ரவ்னீத் சிங் பிட்டு, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் பீன்ட் சிங்கின் பேரனான இவர், 2024-ல் பாஜகவில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். தொடர்ந்து அவர் ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.