சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறும் மெஸ்ஸி…? – FAREWELL போட்டிக்கு அர்ஜென்டினா ஏற்பாடு செய்வதாக தகவல்…!

சர்வதேச கால்பந்திலிருந்து அர்ஜென்டின வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2026 ஃபிஃபா உலகக் கோப்பைதான் அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தோல்வியையடுத்து மைதானத்தில் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டின ரசிகர்கள் உடைந்த அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்திலிருந்து மெஸ்ஸி ஓய்வு அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அர்ஜென்டின ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அர்ஜென்டின அணிக்காக, அடுத்த சில மாதங்களுக்கு அவர் தொடர்ந்து விளையாட விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் மற்றொரு உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பது கடினம்.

மெஸ்ஸிக்காக ஒரு சிறப்பு வாய்ந்த பிரியாவிடைப் போட்டியை ஏற்பாடு செய்ய அர்ஜென்டினா கால்பந்து சங்கம் திட்டமிட்டு வருகிறது. இந்த நிகழ்வு, மெஸ்ஸிக்கும் அவரது ரசிகர்களுக்கும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

மெஸ்ஸியின் விளையாட்டு வாழ்க்கை அசாதாரணமான ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. மெஸ்ஸியை மைய நபராகக் கொண்டு, அர்ஜென்டினா அணி, 2021 கோபா அமெரிக்கா, 2022 ஃபினாலிசிமா, 2022 ஃபிஃபா உலகக் கோப்பை மற்றும் 2024 கோபா அமெரிக்கா ஆகியவற்றை வென்றது. மேலும் இந்த ஆண்டு பிஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.