உண்மையாக பணியாற்றினால், மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இதையொட்டி அவர், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். மதுரை பெத்தானியாபுரத்தில், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, செல்லூர் ராஜூ வரவேற்றார்.
அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினி, பண்பும், இரக்க குணமும் கொண்டவர் என்றும், எம்ஜிஆருக்குப் பிறகு ரஜினி மட்டுமே இந்த பண்பு உண்டு என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைப்பதாகவும், உண்மையாக உழைத்தால் மக்கள் யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.







