லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டுமானால், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை அடையாறில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை மாற்றுவதால் பயன் இல்லை என்றும், அடிப்படை அமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாகவும் சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பதன் மூலமே, தமிழ் மொழியின் பெருமையும், தமிழர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்று வலியுறுத்திய சீமான், இதை கருத்தில் கொண்டு, இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.







